மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |
மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |
ராசி மண்டல நட்சத்திர குறியீட்டில் ஐந்தாவதாக இருக்கின்ற மிருகசீரிஷம் நட்சத்திரம் மானின் உருவம் கொண்டது. நட்சத்திர தெய்வம் சந்திரன், நட்சத்திர அதிபதி செவ்வாய், நட்சத்திரத்தின் விலங்கு பெண் சாரை, நட்சத்திர மரம் கருங்காலி, பறவை கோழி, மூவகை கணங்களில் தேவகணம் ஆகும். மிருகசீரிட நட்சத்திரகாரர்கள் நீங்கள் மற்றவர்களை பார்த்தவுடனே எடை போட்டு விடுவீர்கள். உங்களுடைய நட்சத்திர தெய்வம் சந்திரனாக இருப்பதினால் மற்றவர்களை காட்டிலும் உங்களுக்கு மூளை வேகமாக செயல்படும். சதுரங்க போட்டிகளில் எதிராளியை எளிதில் கணக்கிட்டு வெற்றி பெறுவீர்கள்.பேச்சு திறமையுள்ள நீங்கள் மிகச் சிறந்த மேடை பேச்சாளராக விளங்குவீர்கள். ஆசிரியர்,பேராசிரியர்,வக்கீல்,நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சேல்ஸ் மேன், புலனாய்வு துறை, பத்திரிகை துறைகளில் எளிதில் பிரபலம் அடைவீர்கள். நட்சத்திர அதிபன் செவ்வாயாக இருப்பதினால் துணிச்சல் மிக்க துறைகளான ராணுவம், வனத்துறை, காவல் துறைகளில் உங்கள் பங்களிப்பு மிகுதியாக இருக்கும். ஜவுளி கடை வியாபாரம் நன்றாக வரும். நவரத்தின கற்களுடன் சம்பந்தப்பட்ட நகைக்கடை வியாபாரமும் வரும். மிருககாட்சி சாலையில் பயிற்சியாளராகவும் பணி புரிவீர்கள். துணிச்சலும், திறமை நிறைந்த சவால்கள் உள்ள துறைகளே உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும். உங்கள் நட்சத்திர அதிபன் செவ்வாயாகவும், ராசி அதிபன் புதனாகவும் இருப்பவர்கள் குத்துச் சண்டை நிபுணர்களாக விளங்குவீர்கள் புதன் யூகித்து அடிக்கும் யுத்தியையும் செவ்வாய் பலம் வாய்ந்த குத்துகளையும் குறிக்கும். தவிர பூமி சம்பந்தப்பட்ட கட்டுமான துறையிலும் வெற்றி பெறலாம் பரிகாரம் – தெய்வங்களில் வீரபத்திரரும் பத்திரகாளியும் உங்களுக்கு பக்க துணை புரிவார்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாட்களில் ஆலயம் சென்று வணங்கி வழிபாடு செய்தல் வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு உணவிட்டு வந்தால் கர்ம வினை தாக்கங்கள் குறைந்து வாழ்க்கை வளமாகும்…
உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்