பரணி நட்சத்திரத்தின் பலன்களும் — பரிகாரங்களும் |
பரணி நட்சத்திரத்தின் பலன்களும் — பரிகாரங்களும் |
ராசி மண்டலத்தின் இரண்டாவது நட்சத்திரமான பரணி கருப்பை வடிவம் கொண்ட நட்சத்திரமாகும் நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆவார். நட்சத்திரத்தின் தெய்வமாக எமதர்மர் இருக்கின்றார். மூவகை கணத்தில் மனித கணமாக இருக்கின்ற பரணிக்குரிய விலங்கு ஆண் யானை பறவை காகம், அதற்குரிய மரம் நெல்லி மரமாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களே, சமூக மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் திறமையை வடிவமைத்து வெற்றி வீரராக வாழ்வீர்கள். ஆரம்ப காலத்தில் பிரச்னைகளை கண்டு தடுமாறும் உங்களுக்கு காலப்போக்கில் வெற்றி வசமாகும். தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய மூன்றும் உங்கள் பலமாகும் உங்களுடைய துறைகளில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வருவீர்கள். லட்சிய வாதிகளாக திகழும் நீங்கள் ஒரு போதும் உங்களுடைய கொள்கைகளை விட்டு கொடுக்க மாட்டீர்கள். இந்த வருடத்தை பொறுத்த வரையில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். உங்களுடைய செய் தொழிலானது முன்னேற்றம் அடையும். கூட்டாளிகள் பண முதலீடு செய்து உங்களுடைய தொழிலை வளர்ச்சி அடையவும் செய்வார்கள முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. அதிர்ஷ்டமான தொழில்கள் – கலைத்துறை, பொழுதுபோக்கு அம்சமுடைய தொழில்கள், ஓட்டல் நிர்வாகம். மருத்துவத்துறை. தேயிலை சம்பந்தபட்ட தொழில்கள், எரிவாயு ஏஜென்சி, அரசியல். பரிகாரம் – நட்சத்திர அதிபன் சுக்கிரனாகவும் ராசியாதிபதி செவ்வாயாகவும் இருப்பதால் பசித்த உயிர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். நட்சத்திர அதிதேவதை எமனாக இருப்பதால் எமனுக்குரிய தென் திசையில் அமைந்த சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவர கரும வினையின் தாக்கங்கள் குறையும். குறிப்பாக நெல்லி மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவதால் முன்னேற்றம் அதிகரிக்கும். அன்னதானம் செய்ய இயலாத அன்பர்கள் உங்கள் நட்சத்திர பறவையான காகத்திற்கு ஒரு பிடி அன்னமிடுவதால் கர்மவினை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்…
உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்