Fri. Dec 20th, 2024

தீபாவளி சீட்டு கோடி கணக்கில் மோசடி | நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை |

தீபாவளி சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி | நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை |

சென்னை முகப்பேர் JJ நகர் பச்சையப்பா தெருவில் அனந்தபாபு என்பவர் DJ Group என்னும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இந்த DJ Group தீபாவளியை முன்னிட்டு கடந்த 2018 முதல் 2019 வரை தீபாவளி பண்டு சீட்டு நடத்தப்பட்டது. இதில் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயம் பட்டாசு பாக்ஸ் மற்றும் சில்வர் பாத்திரங்கள் வழங்குவதாக கூறி தீபாவளி பண்டு அறிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் செலுத்தி பண்டு சீட்டு தொகையை கட்டி வந்த நிலையில் தீபாவளி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டிஜே குரூப் பண்டு சீட்டு போட்ட நபர்களுக்கு பட்டாசு பொருளும் சில்வர் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் தங்கம் வெள்ளி நகைகளின் விலை ஏற்றத்தால் டிஜே குரூப் அறிவித்த 4 கிராம் தங்க நாணயம் மற்றும் நான் 40 கிராம் வெள்ளி நாணயம் ஆகியவற்றை சில நாட்கள் கழித்து தருவதாகக் கூறி பண்டு சீட்டு பணம் செலுத்திய நபர்களிடம் தெரிவித்துள்ளனர்…

தெரிவித்தவாறு வழங்கப்படாததால் முகப்பேரில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பண்டு சீட்டு பணம் செலுத்தி நபர்கள் அனைவரும் கேட்டனர் நிறுவனத்தின் சார்பில் நேற்று வளசரவாக்கத்திற்கு பண்டு சீட்டு போட்ட அனைவரையும் வரவழைத்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அங்கு சென்ற பொதுமக்கள் கூறியது போல் டிஜே குரூப் சார்பில் யாருமே வரவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஜேஜே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்…

பின்னர் JJ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தை சார்ந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியாக தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்….

பேராண்மை செய்தி குழு