அஸ்வினி நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |
அஸ்வினி நட்சத்திரத்தின் பலன்களும் பரிகாரங்களும் |
அஸ்வினி நட்சத்திரம் கால புருஷ சக்கரத்தில் முதல் நட்சத்திரமாகும் நட்சத்திர அதிபதி கேது, ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திர வடிவம் குதிரைத்தலை, நட்சத்திரத்திற்கான தெய்வம் தேவ லோக மருத்துவர்களான அஸ்வினி குமாரர்கள் நட்சத்திர கணம் தேவகணம். யோனி -ஆண் குதிரை, மரம் -எட்டி. நட்சத்திர பறவை – ராஜாளி, நட்சத்திர குணம் – வேகம், ஆக்ரோஷம். அஸ்வினி நட்சத்திரகாரர்கள் பார்ப்போரை கவரும் முகத் தோற்றம் கொண்டவர்கள் அகன்ற நெற்றி, திடமான தேகம், சிவந்த கண்களை கொண்டிருப்பார்கள். மருத்துவம், போக்குவரத்து துறை, நீதித்துறை, உலோக கனிமங்கள், விளையாட்டு துறை, கலைத்துறை, ஆகியவற்றில் திறமையுடன் மருத்துவத்துறைகளில் நிபுணர்களாக விளங்குவார்கள். அஸ்வினி நட்சத்திரகாரர்கள் இந்த வருடம் உலோகம் இரும்பு கட்டுமான துறை, நிலம், வாகன விற்பனை, மருந்து விற்பனை, விவசாயம், ஆகிய துறைகளில் முன்னேற்றம் காண்பார்கள். பொதுவாக அஸ்வினி நட்சத்திரகாரர்கள் தான் சார்ந்துள்ள தொழிலில் திறன்களை வளர்த்து கொண்டு நிபுணத்துவம் பெறுவார்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய சுப காரியங்கள் மாங்கல்யம் செய்தல், குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்தல்,வாகனம் வாங்குதல் பரிகாரம் – ஏழை எளியோருக்கு உயிர் காக்கும் மருத்தவ உதவிகளை செய்து உணவினை தானமாக கொடுங்கள். மேற்சொன்ன பரிகாரத்தை செய்வதின் வாயிலாக நிச்சயம் உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். நட்சத்திர அதிபதி ஞானகாரகன் கேதுவாக உள்ளதால் முதியோர்களை உங்கள் செலவில் புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்து சென்று வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக நீங்கி வளம் பெறுவதை கண்கூடாக உணரலாம்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்