Fri. Dec 20th, 2024

காவல்துறையின் CCTV-யை உடைத்த வழக்கில் | 4 பேர் கைது இருவர் தலைமறைவு |

காவல்துறையின் CCTV -யை அடித்து உடைத்த நால்வர் கைது | இருவர் தலைமறைவு |

சென்னை திருவிக.நகர் கே.சி.கார்டன் 2வது தெரு மற்றும் 5வது தெரு பகுதிகளில் திருவிக நகர் காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மூன்று கொலை மற்றும் 15 வழக்குகளில் தொடர்புடைய அருண் என்கின்ற கெண்டை அருண் பிரபல ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் வருவதை சிசிடிவி கேமரா மூலம் திருவிக நகர் போலீசார் கண்டு பிடித்து அடிக்கடி அருனை கைது செய்தனர். இதனால் அருண் நண்பர்கள் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்குவது என முடிவு செய்தனர்…

இதன் பேரில் இம் மாதம் ஒன்பதாம் தேதி இரவு ஆள் நடமாட்டம் இல்லாத போது சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கினர் மறுநாள் தகவல் அறிந்து அங்கு சென்ற திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அருணின் நண்பர்களான ஏசி கார்டன் பகுதியைச் சேர்ந்த ராகுல் (19) இளங்கோ (19) ஜானகிராமன் (20) பரத் (21) ஆகிய நால்வரையும் கைது செய்தனர் மேலும் முக்கிய குற்றவாளிகளான கெண்டை அருண் பென்சில் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்…

நிருபர் வே.சரவணன்