மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக | நால்வரை கைது செய்த போலீசார் |
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக | நால்வரை கைது செய்த போலீசார் |
நாகர்கோவில் அருகே பள்ளி மாணவர்களுக்கு மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த புகார்களை அடுத்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் நால்வர் பிடிப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த பொன்டேனி (30), ரவிக்குமார் (எ) பானை ரவி(48), கண்ணன் (38), ஜெகன்(41) ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 4 கிலோ 200 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் உள்ள கஞ்சாவின் மதிப்பு சுமார் 70 ஆயிரம் ரூபாய் எனவும் நாகர்கோவிலில் இதுவரை கஞ்சா விற்பனை செய்த ஏழு நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு