பொறுமையும் செயல்திறனும் கொண்ட மகர ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு |
பொறுமையும் செயல்திறனும் கொண்ட மகர ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு |
பொறுமையும் செயல்திறனும் மிக்க மகர ராசியினருக்கு சென்ற ஆண்டு விரய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் உங்களுக்கு பண விரயத்தை தந்திருப்பார். ஏழரை சனியை பொறுத்தவரை மகர ராசிக்காரர்கள் பயப்பட தேவையில்லை ராசிநாதனே சனி இருப்பதினால் துன்பங்களை தரமாட்டார். உங்கள் தசா புத்திகள் பாதகமாக இருந்தால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மற்றவர்கள் ஏழரை சனியை கண்டு பயப்பட வேண்டாம். ராசிநாதன் சுய ராசியில் சஞ்சரிக்கின்ற காலங்களில் சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். சனியின் பார்வை பலன் வாகன செலவுகளை தரும், வீடுகட்ட இது உகந்த நேரம் இல்லை தாயாரின் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்களை தவிர்த்தல் நலம் தரும் பணிபுரியும் சக பணியாளர்களுடன் நட்புடன் இருத்தல் வேண்டும் வேலை மாற்று சிந்தனை மேலோங்கும் உங்கள் ராசிக்கு விரயாதிபதியான குரு விரயத்தில் ஆட்சி பலம் பெற்றுள்ளதால் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்வதாலும் கர்மவினை கெடு பலன்கள் நிகழாமல் குருபகவான் உங்களை காத்தருள்வார்.குருபகவான் மோட்ச ஸ்தானத்தில் இருந்து நாலாம் இடத்தை பார்வை செய்வதால் வாகன செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குருவின் பார்வை ஆறாம் இடத்திலே இருப்பதால் நோய்கள், கடன்கள் தீரும் குருவின் பார்வை அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால் தடைகள் கண்டங்கள் விலகும்…பரிகாரம் சனிக்கிழமைகளில் நரசிம்ம பெருமாளை வணங்கி வழிபட்டு ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்தல் வேண்டும் மொத்தத்தில் குருவருள் துணை நிற்கும்…
கும்ப ராசிக்கு உண்டான பலன்களை நாளை காணலாம். அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்