Fri. Dec 20th, 2024

கைதிக்கு நேரில் பாராட்டு தெரிவித்த | சிறை கண்காணிப்பாளர் |

கைதிக்கு நேரில் பாராட்டு தெரிவித்த | சிறை கண்காணிப்பாளர் |

புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் கிளை சிறைச்சாலை அருகே உள்ள சிறைத்துறை சார்பில் சிறை வாசிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் கடந்த 10ம் தேதி பரம்பூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்தபோது ரூபாய் 1.74 லட்சத்தை பெட்ரோல் பங்கில் வைத்து விட்டு சென்று விட்டார். இதனை கண்ட அங்கு பணிபுரிந்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளான கார்த்திக், புஷ்பராஜ் ஆகியோர் அந்த பணத்தை எடுத்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர். அவர் விசாரனை மேற்கொண்டு பணத்தை தவறவிட்ட ஜானகிராமனை வரவழைத்து அந்த பணத்தை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி ஒப்படைத்தார். மேலும் கார்த்திக், சிவகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்…

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறைக் கைதிகளிடம் நல்ல எண்ணங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல இந்த கைதிகளுக்கு நல்லொழுக்கம் சான்றிதழ் குறிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுக்கு விடுதலை காலங்களில் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்..

பேராண்மை செய்தி குழு