சிவகங்கை அருகே முதாட்டியை கொன்று | நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது |
சிவகங்கை அருகே முதாட்டியை கொன்று | நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது |
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலைய எல்லைகுட்பட்ட ஒக்கூர் கிராமத்தில் தனியாக வசித்து வரும் ஆதப்பன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரையும் கடந்த 09.11.19 தேதி இரவு மர்ம நபர்கள் மேற்படி மீனாட்சியை என்பவரின் கழுத்தை நெறித்து கொலை செய்தும், ஆதப்பன் என்பவரை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த ரூபாய்.1,79, ஆயிரம் பணமும் சுமார் 8 பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அப்துல் கஃபூர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதூரை சேர்ந்த கணேஷ் 25/தந்தை பெயர் காளிதாஸ், என்றும் பச்சேரி கல்லூரணி பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி 25/தந்தை பெயர் காந்தி, என்றும் தெரியவர இருவரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகள் உட்பட பணம் மற்றும் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
பேராண்மை செய்தி குழு