Fri. Dec 20th, 2024

தர்மத்தின் வழியில் செல்லும் தனுசுக்கு | இந்த 2020ம் ஆண்டு குருவருள் |

தர்மத்தின் வழியில் செல்லும் தனுசு ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு குருவருள் |

தனுசு ராசிகாரர்களுக்கு இதுவரை ஜென்ம ராசியில் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு காரிய தடைகளை தந்து வந்த சனி தற்போது இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ளார். மகரம் சனிபகவானின் ஆட்சி வீடு ஆனதால் பொருளாதார நிலை சீராகும் கண் சம்பந்தமான உபாதை ஏற்படலாம். தனுசு ராசி அன்பர்கள் கண்புரை அறுவைச் சிகிச்சைகளை வெள்ளிக்கிழமைகளில் செய்யாமல் வளர்பிறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தல் வேண்டும். சனிபகவானின் பார்வை நாலாம் இடத்தில் இருப்பதால் தாயாரின் உடல் ஆரோக்கியம்  பாதிக்க படலாம் சனிபகவானின் பார்வை அஷ்டமத்தில் இருப்பதால் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை குறிப்பாக நீர் நிலைகளில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். சனிபகவானின் பார்வை லாபஸ்தானத்தில் இருப்பதால் ஆசைகள் இலட்சியங்கள் நிறைவேறும். இதுநாள் வரையில் பனிரெண்டில் சஞ்சரித்த ராசிநாதன் குருபகவான் தற்போது ராசியில் பலம் பெற்று உள்ளதால் உடல் பலம் பெரும் நோய்கள் நீங்கும் முக வசீகரம் ஏற்படும் குருபகவானின் ஐந்தாமிட பார்வை குழந்தை செல்வத்தை தரும், குழந்தைகளின் கல்வி சிறப்புறும் பங்குச் சந்தைகளில் லாபம் உண்டு, விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைத்துறையில் உள்ள தனுசு ராசி அன்பர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குரு பகவானின் ஏழாமிட பார்வையினால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரத்திற்கு அதிர்ஷ்டமான கூட்டாளிகள் வந்து அமைவார்கள்.குரு பகவானின் ஒன்பதாமிட பார்வையின் பயனாக தெய்வ அனுகிரகம் கூடும் கண்டங்கள் நீங்கும், தொலைதூர வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மொத்தத்தில் உங்களுக்கு குரு பார்வை கோடி நன்மை..

அடுத்து மகர ராசி அன்பர்களுக்கு நாளை பலன்கள் வெளியாகும்.

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்.