துணிவே துணையென துணியும் துலாம் ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு முதல் |
துணிவே துணையென துணியும் துலாம் ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு முதல் |
துலாம் ராசி அன்பர்களே. இயல்பாகவே உங்களுக்கு சக்தி மிகுந்திருக்கும் இந்த ஆண்டு உங்களுக்கான உங்களின் வெற்றியை உறுதியாக்கும் ஆண்டாகும் குருவின் இரண்டாம் இட சஞ்சாரம் உங்களுக்கு கடன் சுமையை தந்திருக்கும் தற்போது மூன்றாம் இடத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தை பார்வை செய்து கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவார். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தையாருக்கு உடல் நலத்தை ஏற்படுத்தும் பிதுர் வழி சொத்துக்கள் வந்து சேரும் காசி ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை மேற் கொள்வீர்கள். குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும். துலாம் ராசியை பொறுத்தவரை சனிபகவானே சுபத்தை தருவதில் மிக மேலான கிரகம் ஆவார் தற்போது சனிபகவான் சுகஸ்தானத்தில் சொந்த ராசியில் சஞ்சாரம் செய்வதால் வீடு, நிலம், வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும் சனியின் ஆறாமிட பார்வை உங்களை வெற்றியாளராக மாற்றும் சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களுக்கு தொழில் வளர்ச்சியை தரும் சனிபகவானின் பத்தாம் பார்வை உங்களுக்கு சக்தியும் புத்தியையும் தரும் சனி கொடுத்தால் யார் தடுப்பார் மொத்தத்தில் இந்தவருட கிரக நிலைகள் உங்களுக்கு ஏற்றத்தை தரும் பரிகாரம் வியாழக்கிழமைகளில் சித்தர்களின் சமாதி உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று தரிசித்து மூன்று எண்ணிக்கை உள்ள ஏழைகளுக்கு தலா ஒரு இனிப்பு, மற்றும் சாப்பாட்டு பொட்டலத்துடன் முப்பது ரூபாய் தானம் செய்ய பொருளாதார வளர்ச்சி பெருகும்…
விருச்சிக ராசி அன்பர்களுக்கு நாளை பலன்கள் வெளியாகும்.
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்