புத்தியும் யுக்தியும் கொண்டு செயல்படும் கன்னி ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு எப்படி இருக்கும் |
புத்தியும் யுக்தியும் கொண்டு செயல்படும் கன்னி ராசிக்கு இந்த 2020ம் ஆண்டு எப்படி இருக்கும்.
காந்த பார்வையினால் காண்போரை வசீகரிக்கும் கன்னி ராசி அன்பர்களே… புத்தியும் யுக்தியும் உங்களுடைய சக்தியாகும். இந்த வருட கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாவே இருக்கின்றன இதுவரை மூன்றில் குரு இருந்து கொண்டு வாகன செலவுகளையும், தாயாருக்கு உடல் நல குறைவையும் ஏற்படுத்தினார். தற்போது நாலாமிடத்தில் ஆட்சி பெறுவதால் தாயாரின் உடல் நிலை சீராகும்,புதிதாக வீடு வாகனம் அமையும்.
குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் வாகன போக்குவரத்தில் சற்று கவனம் தேவை. நெருப்பு சம்பத்தப்பட்ட இடங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.
குருவின் சப்தம பார்வை உங்கள் பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில் வளர்ச்சியடையும். அதே சமயம் தொழிலில் போட்டியளர்களின்
கை ஓங்கி இருக்கும். குருவின் பார்வை பன்னிரண்டாம் இடத்தில இருப்பதால்… கடனில் வாகனம் வாங்குதல் வீடு கட்டுதல் போன்ற சுப செலவுகள் உண்டாகும். இதுவரை அஷ்டமத்தில் இருந்து இன்னல்களை செய்த சனி பகவான் பூர்வபுண்யத்தில் ஆட்சி பெற்று சுபத் தன்மையுடன் விளங்குவதால் நன்மைகளை வாரி வழங்குவார். குழந்தை வரம் வேண்டுவோருக்கு சனிபகவானின் அருளினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கலைத் துறையில் உள்ளோர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும், விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவீர்கள், பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். சனி பகவான் மூன்றாமிட பார்வையினால் சப்தம ஸ்தானத்தை பார்வையிடுகின்றார். இதன் காரணமாக வாழ்க்கை துணைவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.
சனிபகவானின் பத்தாமிட பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமாதலால் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக இருக்கும். மொத்தத்தில் மகிழ்ச்சியும் குதூகுலமும் நிறைந்த ஆண்டாகும்.
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்