Fri. Dec 20th, 2024

2020ல் வெற்றியை நோக்கி பயணிக்கும் மேஷ ராசி அன்பர்களே.

2020ல் வெற்றியை நோக்கி பயணிக்கும் மேஷ ராசி அன்பர்களே.

அன்பார்ந்த மேஷராசி அன்பர்களே, இந்த 2020ஆம் வருட தொடக்கமே வெற்றி தான், மூன்றாம் இட ராகு மனோ தைரியத்தையும் செயலில் வெற்றியையும் தருவார். உடன் பிறந்த இளைய சகோதர சகோதிரிகளுக்கு அலைச்சல் இருந்தாலும்… உடல்நலம் சீராக இருக்கும். குருவின் பார்வை அவர்களுக்கு தெய்வ அனுகூலத்தையும் வெற்றி வாய்ப்பையும் தரும், பாக்கியஸ் தானத்தில் குருவின் சஞ்சார நிலை மேஷ ராசி அன்பர்களுக்கு மிக நல்ல பலன்களை தரும்.

இதுவரை தடைபட்டு இருந்த காரியங்கள் நிறைவு பெறுவதோடு மனநிம்மதியை தரும், குழந்தைகளின் கல்வி முன்னேற்றமடையும். உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியான சனி சுய ஸ்தானமேறுவதால் தொழில் வளர்ச்சி அடையும், புகழ் கிடைக்கும், அரசு வேலைசெய்வோருக்கு உத்யோக உயர்வு கிடைக்கும்.

சனிபகவானின் பார்வை நாலாம் இடத்தில விழுவதால் தாயாரின் உடல்நலன் பாதிக்கப்படலாம், வாகன செலவுகள் வரலாம், வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை சிறு சோதனைகள் அவ்வப்போது வந்தாலும் குருபகவானின் பார்வையினால் தவிடுபொடியாகும்.மொத்தத்தில் இந்த வருடத்தில் நீங்கள் வெல்லப்போவது உறுதி…

அருள் வாக்கு ஜோதிடர் அக்னீஸ்