Sat. Dec 21st, 2024

ரூபாய் 15 லட்சத்துக்கு மேல் பொய் கணக்கு | தாசில்தார்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் |

ரூபாய் 15 லட்சத்துக்கு மேல் பொய் கணக்கு | தாசில்தார்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் |

புதுக்கோட்டை கோட்டாட்சியர் திரு.தண்டாயுதபாணி அவர்கள் விதிகளுக்கு புறம்பாக அரசு ஆணைக்கு முரணாக செயல்படுவதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் சங்க நிறுவனர் ரா.போஸ் மற்றும் மு.மாநில பொதுச் செயலாளர் பாக்கியநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்…

கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பொய்யான புகாரை சுமத்தி பணி இடம் மாற்றம் செய்வதை கண்டித்தும் 12 தாலுகாக்களில் பணிபுரியும் தாசில்தார்கள் கஜா புயல் நிவாரணம் தொகையில் 15 லட்ச ரூபாய்க்கும் மேலாக பொய்யான கணக்குகள் தயாரித்ததை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

பேராண்மை செய்தி குழு