Sat. Dec 21st, 2024

மக்கள் பயன்பாட்டிற்கு தரமான சாலைகள் வருவதற்கு | உள்ளாட்சி தேர்தல் வரவேண்டும் – பிரேமலதா |

மக்கள் பயன்பாட்டிற்கு தரமான சாலைகள் வருவதற்கு | உள்ளாட்சி தேர்தல் வரவேண்டும் – பிரேமலதா |

திருச்செந்தூர் மற்றும் திருத்தணி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி நிகழ்ச்சிக்காக சாமி தரிசனம் செய்துள்ளேன் மேலும் கேப்டன் அவர்கள் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்தேன் சினிமா துறைக்கு GST.வரி விதிப்பு நாட்டின் வளர்ச்சிக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் நாடு முன்னேற வேண்டுமென்றால் GST.வரி விதிப்பு கட்டாயம் வேண்டும். எந்த ஒரு திட்டமும் செயல்பாட்டுக்கு நல்ல முறையில் வரஇரண்டு ஆண்டுகள் ஆகும் GST மக்கள் முன்னேற நல்ல திட்டம் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மட்டுமே மாநிலத்திலுள்ள அனைத்து சாலைகளும் சீரான முறையில் சிறப்பான முறையில் சாலைகள் போடப்படும் தற்போது நான் சாலை மார்க்கமே பயணம் செய்து வருகிறேன்…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சரியில்லை அதனை சரிசெய்ய கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேலும் அவர்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கை பதவி உயர்வு வேண்டும் சம்பள உயர்வு வேண்டும் மருத்துவர்கள் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து தான் அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.தேமுதிக சார்பில் அவர்களுக்கு கண்டிப்பாக நாங்கள் ஆதரவு அளிப்போம், அவர்களது நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்களிடமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடமும் எடுத்துக் கூறுவோம் என்றும் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்…

பேராண்மை செய்தி குழு