Sat. Dec 21st, 2024

போலீசில் புகார் அளித்தது யார் என கேட்டு ரவுடிசம் | திருமங்கலம் போலீசார் நடவடிக்கை என்ன? |

போலீசில் புகார் அளித்தது யார் என கேட்டு ரவுடிசம் | திருமங்கலம் போலீசார் நடவடிக்கை என்ன? |

சென்னை, திருமங்கலம் பெரியார் நகரில் தீபாவளியன்று பொது இடத்தில் ஒரு கும்பல் குடித்துவிட்டு அட்டகாசம் செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த திருமங்கலம் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த நபர்கள் மிரட்டும் வகையில் அப்பகுதிக்கு மீண்டும் வந்து புகார் அளித்த நபர் யார்? என கேட்டு அருகில் இருந்த வாகனங்களை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் திருமங்கலம் காவல் நிலையத்தில் தீபக் என்ற ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…

தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில் புகார் அளித்த இதயசந்திரன் என்பவர் போலீசாரிடம் தனக்கு அவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்…

நமது நிருபர்