Sat. Dec 21st, 2024

கையும் களவுமாக பிடிபட்ட காவல் ஆய்வாளர் | செயல்படுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை |

கையும் களவுமாக பிடிபட்ட காவல் ஆய்வாளர் | செயல்படுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை |

வில்லிவாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் தமிழழகன், என்பவர் பிரபாகர் என்பவரின் புகாரை விசாரிக்க ரூ.20 அயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பிரபாகரன் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் பிரபாகர் ஆய்வாளரை வரசொல்லி அவரிடம் பணத்தை கொடுத்தார். தமிழழகன் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக  கைது செய்யப்பட்டார். ஆய்வாளர் தமிழழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 2012ல் இருந்து ஓய்வு பெற்ற ரெயில்வே போலீசார் சுப்பிரமணியன் மற்றும் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிராபாகர் என்பவருக்கும் இடையில் இருந்த சொத்து பத்திரபதிவு தொடர்பான பிரச்சைனையில்  தலையிட்டு, பிரபாகர் நவம்பர் மாதத்திற்குள் ரூ.2 லட்சத்தை சுப்பிரமணியனுக்கு தரவேண்டும் என்று சுமூகமாக பேசி முடித்துள்ளார். அதற்காக ரூ.20 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பிரபாகரிடம் கேட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அண்ணாநகர் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வரும் தமிழழகன் பணத்தை பெறும் பொழுது லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் செல்வி தலைமையில் 12 பேர் கொண்ட போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 10 உள்ள 20 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.  

ஏற்கனவே லஞ்சம் வாங்கிய புகாரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தமிழழகன் மாற்றப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

நிருபர் வே.சரவணன்✍