கொரட்டூர் ரவுடி சுரேஷை கொலை செய்து | உடலை முட்புதரில் வீசிய நபர்கள் |
கொரட்டூரில் ரவுடி சுரேஷை கொலை செய்து | உடலை முட்புதரில் வீசிய நபர்கள் |
சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, கலைவாணர் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ்(30), இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கடந்த 14 ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது தாயார் கலா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து கொரட்டூர் போலீசார் சுரேஷை தேடி வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெயகொடி- கார்த்திகா தம்பதிகள் மீது சந்தேகம் எழுந்ததும். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முதலில் சுரேஷ் அத்துமீறி தங்கள் வீட்டிற்குள் நுழைந்தாகவும் இதனால் அவரை அடித்து உதைத்து கட்டி போட்டதாகவும், பின்னர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுரேஷ் தப்பி சென்றதாக கூறியுள்ளனர். இதில் பல சந்தேகம் எழுந்ததுள்ளதால் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுரேஷை கொலை செய்துவிட்டு உடலை மறைக்க செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் அருகே உள்ள முட்புதரில் வீசியது தெரியவர. இது குறித்து வழக்கு பதிவு செய்த கொரட்டூர் காவல் துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெயகொடி குடும்பத்திற்கும் சுரேஷ் என்பவருக்கும் என்ன தொடர்பு என்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை கள்ளக்காதல் காரணமாக நடந்திருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது…
நிருபர் வே.சரவணன்