கல்லூரி மாணவனை தாக்கிய வழக்கில் | அரசியல் பிரமுகர் மற்றும் அவரது மகன் கைது |
கல்லூரி மாணவனை தாக்கிய வழக்கில் | திமுக வட்ட செயலாளர் மற்றும் அவரது மகன் கைது |
திருவல்லிக்கேணியில் கல்லூரி மாணவனை தாக்கிய வழக்கில் திமுக வட்ட செயலாளர் மற்றும் அவரது மகன் இருவரும் கைது. சின்ன சேலம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மூர்த்தி (22). இவரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு 114வது வட்ட செயலாளரின் மகன் கவித்ரன் (26) மருத்துவ உதவிக்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பணத்தை திரும்பி கேட்க சென்ற போது மூர்த்தியை வட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது மகன் கவித்ரன் ஆகியோர் தாக்கியுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசாரிடம் மூர்த்தி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தந்தை மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்