அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் |
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் |
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு பகுதியில் உள்ள மேல் திருத்தணி என்ற இடத்தில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தடம் எண்-777 என்ற அரசு பேருந்தை திடீரென்று அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபர் கல்லெறிந்து முன்பக்கம் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பேசிவந்தார்…
அவரது பாக்கெட்டில் ஒரு டைரியில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர் என்றும் இவர் மனநல மருத்துவமனையில் இருந்து வந்ததாகவும் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை காலை திருத்தணி காவல் நிலையத்திற்கு அளித்து வருவதாக அவரது பெற்றோர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த வாலிபர் இரண்டு தினங்களுக்கு முன்பு இவரது வீட்டை விட்டு தப்பி வந்துள்ளார். திருத்தணி போலீசார் இந்த சைக்கோ வாலிபர் திருத்தணி காவல் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் நடராஜ் கண்ணாடி உடைந்து முன்பக்க தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதேபோல் அந்த பஸ்ஸில் பயணம் செய்த மற்றொரு அரசு பேருந்து நடத்துனர் ராஜா என்பவரும் கண்ணாடி கால் பகுதியில் குத்தியதில் காயம் அடைந்துள்ளார்..
நமது நிருபர்