Fri. Dec 20th, 2024

ஓவியத் துறையில் தனிப் பெண்ணின் சாதனை !

ஓவியத் துறையில் தனிப் பெண்ணின் சாதனை !

குங்கும திவ்யா என்ற ஓவியகலை வள்ளுநர் தனது சொந்த முயற்சியில் சென்னையில் ஓவிய கண்காட்சி திறந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி துவங்கிய இக்கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய அளவில் விருது பெற்ற ஓவியக் கலைஞர் எ.விஸ்வம் கண்காட்சியை துவக்கி வைத்தார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த குங்கும திவ்யா தனது சொந்த முயற்சியில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மிக பெரிய சாதனை என எ.விஸ்வம் தெரிவித்தார்.

“என்னதான் நான் எனது பட்டபடிப்பை முடித்திருந்தாலும் எனது விருப்பம் கலை – வண்ணம் போன்றதிலே எனது ஈர்ப்பு மற்றும் கவனம் சென்றது என்றும் முதன் முதலில் சித்திர பாடத்தில் துவங்கிய நான் தற்போது அக்ரிலிக் இல் ஓவியங்கள் எனது பயணம் ஆகும் என்றும் இதில் முழுதாக தேர்ச்சி பெற எண்ணி நான் பல பட்டறைகள் சென்றேன் எனவும் இத்துறையில் பல கலை வள்ளுநர்களை சந்தித்து பல ஆலோசனை மற்றும் அறிவுரைகளை பகிர்ந்து கொண்டதாகவும் நெடும் பயணத்திற்கு பின் தற்போது நான் இங்கு நிற்கிறேன் என தெரிவித்த குங்கும திவ்யா, எனது ஓவியங்களின் கை பக்குவத்திலேயே நான் கடந்து வந்த பாதையை நீங்கள் அனைவரும் உணரலாம் என தெரிவித்த அவர் இயற்கையே எனது தாய், தந்தையாக நான் உணருகிறேன் என்றும் எனது தந்தை, தாய் வம்சாவழியே விவசாயிகளே காரணம் எனவும் எனது தந்தை மிகவும் பாரம்பரியம் மிக்கவர் அதனால் அவர் என்னிடம் சிறு வயதில் இருந்தே நம் நாட்டு பாரம்பரியத்தை பற்றியும் கோவில் கலைகள் பற்றியும் என்னிடம் அதிகம் கூறுவார் என அவர் தெரிவித்தார்…

அதேபோல எனது தாய் ஒரு சிறந்த இல்லத்தரசி மற்றும் தெய்வீக பற்று கொண்டவர் அவர் எனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை இயற்கையுடன் ஒப்பிட்டு அறிவுரை வழங்கியது உண்டு என்றும்
நாம் இயற்கையுடன் எவ்வாறு ஒற்றுமை மற்றும் பந்தத்தில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் கூறுவார் என்றும் இந்த வளர்ப்பு முறையிலே நானும் எனது தம்பியும் இந்த சமுதாயத்தில் வளர்ந்து வந்தோம் என அவர் தெரிவித்தார். மேலும் எனது தம்பி விஸ்காம் முடித்த ஒரு பட்டதாரி எனவும் எனக்கு பெரும் உதவி செய்யும் எனது அன்பு உறவு என தெரிவித்த அவர் நான் இயற்கையை பல சந்தர்பங்களில் இந்த சமுதாயத்துடன் சேர்ந்து புரிந்து கொண்டுள்ளேன் என்றும் நான் பயணித்து வரும் துறை கடல் அளவில் மிக பெரியது என்பது எனக்கு தெரியும் ஆனால், எனது ஒவியங்களிலே நான் எந்த அளவிற்கு நீண்டு தூரம் இத்துறையில் பயணித்து வந்துள்ளேன் என்பதை எனது ஒவியங்களே அனைவருக்கும் எடுத்து காட்டும் என்று தெரிவித்தார். இந்த கலை துறையில் எனது முக்கிய பொருளாக இயற்கை மற்றும் பெண்மையை தேர்ந்தெடுத்துள்ளேன் இவையை மையமாக வைத்தே எனது ஓவியங்கள் என்றும் தற்போது அக்ரிலிக்கி நடுவே பயணிக்கும் நான், வண்ணங்களுக்கு எனது ஓவியங்களில் கட்டுபாடுகள் விதிப்பது இல்லை எனது ஒவ்வொரு ஓவியத்திலும் எனக்கே நான் வண்ணத்தை பொறுத்தமட்டில் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என்றும் எனக்கு குரு என்று ஒருவர் இல்லாமல் இந்த கலையை கற்றுக் கொண்டதால் எனக்கென்று விதிகளை நான் ஓவியத்தின் போது என்றுமே விதித்ததில்லை என்றும் நான் ஒரு பெண் என்பதால் எனது ஓவியங்களில் பெண்மைக்கே முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன் எனவும் அதே தருணத்தில் அன்னை இயற்கை மீதுள்ள பற்று அலாதி என்பதால் இவை இரண்டையுமே எனது ஓவியங்களில் கொண்டு வருவேன் என குங்கும திவ்யா தெரிவித்தார்.

நிருபர் வெ.ராம்