Fri. Dec 20th, 2024

குடிசை மாற்று வாரியம் பெயரில் நூதன மோசடி | புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறை?|

குடிசை மாற்று வாரியம் பெயரில் நூதன மோசடி | புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறை?|

தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் பெயரை சொல்லி கோடி கணக்கில் பணத்தை சுருட்டி அப்பாவி மக்களை ஏமாற்றி பெரும் அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. சென்னை உட்பட புறநகரங்களில் சமீப காலமாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு வாங்கி தருவதாக பல கும்பல்கள் களத்தில் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலமாக வீடுகளை ஒதுக்கீடு செய்து இருப்பதாக ஒரு ஆணையை தயாரித்து வழங்கியுள்ளனர். ஒவ்வொரு ஒதுக்கீட்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கோடி கணக்கில் மர்ம கும்பல் வசூல் செய்து தலைமறைவு ஆகி உள்ளது. அப்பாவி மக்கள் நம்பும் விதமாக குடிசை மாற்று வாரிய தவணைத் தொகை செலுத்தும் கையேடுகள் முதல் விண்ணப்ப படிவம் வரை வழங்கப்பட்டுள்ளதால் அப்பாவி மக்கள் பணத்தை கொடுத்து மாடி வீடு கிடைக்கும் என நம்பி இருந்தனர். ஆனால் இவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால் மீண்டும் இன்று 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் அளித்துள்ளனர். வாரிய முத்திரை தயாரித்து ஏமாற்றிய பலே கில்லாடிகளை இன்னமும் பிடிக்காமல் இருப்பதற்கு காரணம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முக்கிய அதிகாரிகள் யாராவது பின்புலத்தில் இருக்கிறார்களா என்ற போலீசார் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர். மேலும் தாங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரடி பார்வைக்கு எங்கள் புகார் சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இருப்பார் என காவல் ஆணையர் மீது நம்பிக்கையுடன் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்…

மேலும் இதுபோன்ற மோசடிகள் தற்போது தென் சென்னை பகுதியிலும் நடைபெற்று வருகிறதாகவும் 2015ம் 2016 ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்காக பணம் செலுத்தி இதுவரை வீடு வழங்காததை கண்டித்து புகார் அளிக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு