Fri. Dec 20th, 2024

மாமனாரின் இருசக்கர வாகனத்திற்கு தீவைத்த மருமகன் கைது.

அக்டோபர் 05 2019

சென்னை பெரம்பூர் மரிய நாயகம் மெயின் ரோட்டை சேர்ந்த முகமது சிராஜிதின் (46). இவர் தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்டு இருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து நாசமாகி இருந்தது.

இதேபோல் அவரது வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்த
ரமேஷ் (34) என்பவரின் இருசக்கர வாகனமும் எரிந்து நாசமாகியிருந்ததால்.
இதுபற்றி முகமது மற்றும் ரமேஷ் திரு.வி.க நகா் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது முகமதுவின் மருமகன் காஜா முகைதீன் (29) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில் காஜா முகைதீன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பிரிவுக்கு காரணம் தனது மாமனார் என்ற ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி அவரது வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். இதில் அருகில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த ரமேஷின் வாகனமும் எரிந்துள்ளதால். போலீசார் காஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்…

நிருபர் வே.சரவணன்