போலி ஆவணங்கள் மூலம் அரசை ஏமாற்றிய நபர் | வழிப்பறியில் ஈடுபட்டபோது கைது |
அக்டோபர 04-2019
பெருந்துறை திருவேங்கிடம் பாளையம் பகுதியை சேர்ந்த ராக்கியண்ண கவுண்டர் மனைவி வீரமணி இவர் இன்று காலை 8:30 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் வீரமணி கழுத்தில் அணிந்து இருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். உடனே அவர் திருடன் திருடன் என்று கத்தியதும் அப்பகுதியை சேர்ந்த சிலர் விரட்டிச் சென்று பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் போலி ஆவணம் ஒன்றை தயாரித்து அதன் மூலம் தான் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மகன் என கூறி தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய காஞ்சிக்கோவில் செங்கோடம் பாளையத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி என்றும் தெரியவந்தது, மேலும இவர் கோவை மதுக்கரை, ஈரோடு கடத்தூர், பெருந்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து 15 சவரன் நகை உள்பட 1 LED TV, 2- பைக்குகளை திருடிய வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் சண்முகசுந்தரம்