அசுரன் படத்திற்கு அசுரத்தனமாக பீர் அபிஷேகம் செய்த தனுஷ் ரசிகர்.
அக்டோபர் 01-2019
புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் அசுரன் படம் இன்று வெளியிடப்பட்டது தனுஷின் உருவ படத்திற்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்த ரசிகர்கள்….
இன்று தனுஷ் நடித்த அசுரன் படம் புதுகை சாந்தி தியேட்டரில் வெளியிடபட்டது முதல் காட்சியை பார்ப்பதற்காக ஆர்வமுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெடி வெடித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தனர்.
தியேட்டரின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டுக்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். நடிகர் தனுஷ் பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என்னுடைய படத்திற்கு பால் அபிஷேகம் செய்ய கூடாது என கட்டளையிட்டு இருந்த நிலையில் தியேட்டரின் உள்ளே அசுரன் படத்தின் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது அந்த பிளக்ஸ் போர்டில் இருக்கும் தனுஷ் படத்திற்கு ரசிகர் ஒருவர் பீர் ஊற்றி அபிஷேகம் செய்தார்.
இதுகுறித்து அந்த ரசிகர் இடம் கேட்ட பொழுது தனுஷ் பால் ஊற்றி அபிஷேகம் பிளக்ஸ் போர்டு உருவ படத்திற்கு செய்யக்கூடாது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததால் நாங்கள் பீர் ஊற்றி அபிஷேகம் செய்கிறோம் என தெரிவித்தார்கள் ரசிகர் ஒருவர் தனுஷ் படத்திற்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்தது தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது…
நமது நிருபர்