நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் | புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் |
அக்டோபர் 03 2019
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திர ராஜா கலந்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரின் பணியாளர் விரோத போக்கை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் பண்டிகை நேரத்தில் கடைகளை திறக்க மாட்டோம் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் கருப்பையா மாவட்ட பொருளாளர் நாராயணன் உள்ளிட்டோர். நியாய விலை கடை பணியாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
நமது நிருபர்