Fri. Dec 20th, 2024

Lalitha jewellery கொள்ளை சம்பவம் தொடர்பாக | குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை பிடித்த தனிப்படை போலீசார் |

Lalitha jewellery கொள்ளை சம்பவம் தொடர்பாக | குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை பிடித்த தனிப்படை போலீசார் |

திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனைக்காக சென்றனர். அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சாப்பாடு வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்ற மற்றொரு இளைஞர் அப்ஜுன்ஷேக் என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது….

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் விடுதியில் தங்கி இருந்த மேலும் 5 இளைஞர்களையும் தனிப்படை போலீசார் திருச்சிக்கு கொண்டு சென்றனர். விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து வருகின்றனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் கேரளாவில் நடந்த வங்கி கொள்ளையிலும் வடமாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இவர்களை விசாரிக்க மகாராஷ்டிரா மாநில போலீசார் தமிழகம் வருவதாகவும் கூறப்படுகிறது…

நமது நிருபர்