Fri. Dec 20th, 2024

நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த இருவர் | சிசிடிவி காட்சிகள் மூலம் கைது |

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (23). இவர் இன்று அதிகாலை தனது அலுவலகத்தில் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆர்காட் சாலை வழியாக செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் முத்துகுமாரின் செல்போனை பறித்து கொண்டு தனது வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வழிப்பறியில் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை கொண்டு வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (18) மற்றும் ஆனந்த் (19) கொள்ளையில் ஈடுப்பட்டதும் தெரியவர மேலும் இந்த இரண்டு நபர்கள் மீது ஏதாவது வழக்குகள் நிலுவையில் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்