வீட்டின் பூட்டை உடைத்து 40 சரவன் நகை | 2 லட்சம் பணம் கொள்ளை |
வீட்டின் பூட்டை உடைத்து 40 சரவன் நகை | 2 லட்சம் பணம் கொள்ளை |
சென்னை பெரம்பூர், ஜமாலியா சாந்தி காலணி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவர் அதே பகுதியில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் சிலர் சாகுல் ஹமீதின் வீட்டின் பூட்டை உடைத்து அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள பீரோவை உடைத்து உள்ளே அதிலுள்ள 2 லட்சம் பணம் மற்றும் 40 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று வீடு திரும்பிய சாகுல் ஹமீது குடும்பத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை பணம் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சாகுல் ஹமீது வீட்டில் கொள்ளையர்களின் கைரேகைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது நிருபர்