“வித்தகன்” செய்தி தளம் துவக்கம் |
வித்தகன் மின் இதழ் துவக்கம் |”வித்தகன்” செய்தி தளம் துவக்கம் |
வித்தகன்.காம் என்ற புதிய செய்தி தளத்தை இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மூத்த பத்திரிகையாளரும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ஆசான் திரு.வி.அன்பழகன், அவர்கள் வித்தகன் மின் இதழ் மற்றும் கைப்பேசி செயலியில் முதல் செய்தியை பதிவேற்றம் செய்து துவக்கி வைத்தார். வித்தகன் செய்தி தளத்தின் ஆசிரியர் திரு.T.ஜெய் அவர்களை பற்றி கூறுகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஜெய் அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து பத்திரிகை துறையில் உள்ள ஆர்வம் காரணமாக சிறு இதழ்களில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அவர் வித்தகன்.காம் என்ற செய்தி தளத்தை துவங்கியதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்…
தொடர்ந்து பேசிய அன்பழகன் அவர்கள், இந்த செயலியானது கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காகவும் சிறு பத்திரிகையாளர்கள் நலன் காக்க வேண்டுமென்றும் பத்திரிகை தொழிலிலுள்ள எதிர்ப்புகளையும் மீறி நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வது போல அரசின் குறைகளையும் தவறாமல் சுற்றிக் காட்டி நடுநிலையோடு செயல்பட வேண்டியது பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றும் சிறு மற்றும் பருவ இதழை நடத்துபவர்களுக்கு தமது அறிவுரைகளையும் வழங்கினார்…
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலச் சங்க தலைவர் கா.குரு, அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயசங்கர் , ஞானசேகரன், முகுந்தன், பிரகாஷ், விஜய், மார்கெட் பாபு, அனிச்சமலர் சேகர், நமது நகரம் சரவணன், மக்கள் விருப்பம் தர்மராஜ், தி.மு.க பிரமுகர் திருவாரூர் கந்தசாமி, அவர்கள் மற்றும் நுண்ணறிவு ஆசிரியர் சிவக்குமார், துணை ஆசிரியர் சாம்சங் செல்வராஜ், புதிய குரல் விஜயகுமார்,அதிரடி தீர்ப்பு சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகை தோழர்கள் அனைவரும் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்…