ரவுடிகள் மோதல் | முன்விரோதம் காரணமாக ஒருவர் படுகொலை |
செப்டம்பர் 03-2019
சென்னை வியாசர்பாடி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் ராசையா (24). இவர் மீது வியாசர்பாடி, MKB நகர், புளியந்தோப்பு போன்ற காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த தணிகாச்சலம் என்பவரின் மூன்றாவது மகன் கோகுல் என்கின்ற கோகுல் நாத் (23) ஆகிய இருவரின் கூட்டாளிகளுக்கும் மாமூல் வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கோகுல்நாத் மற்றும் அவரது கூட்டாளிகள் ராசையாவை தேடி அவரது வீடு அருகே சென்று அங்கு நின்று கொண்டிருந்த ராசையா சராமாரியாக தாக்கியுள்ளதாகவும், இதனை அடுத்து ராசையா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு 10 மணி அளவில் வியாசர்பாடி தேசிங்கநாந்தபுரம் முதல் தெருவில் கோகுல்நாத் சென்று கொண்டிருந்த போது ராசய்யா அவரது கூட்டாளிகளுடன் கோகுல்நாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் ஓடிவிட்டனர்.
தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகுல் நாத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் கோகுல்நாத் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் பிரேம்குமார் (23), பரத் (22) மற்றும் அப்புனு (23) உள்ளிட்ட மூவரின் பெயர்களை மட்டும் தற்போது முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கொலை முன்விரோதம் காரணமாகவே நடந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
நமது நிருபர்