நடுரோட்டில் விரட்டி வாலிபருக்கு சரமாரியாக வெட்டு | ஒருவர் கைது | நால்வர் தலைமறைவு |
ஆகஸ்ட் 14-2019
சென்னை, நெற்குன்றம் அபிராமி நகர் பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் நண்பர்களுக்குள் எழுந்த சண்டையில் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (26), என்ற வாலிபரை நடுரோட்டில் அரை நிர்வாணமாக ஓட ஓட விரட்டி வெட்டு. இதில் நண்பர்கள் ஒருவர் கைது, 4 பேர் தப்பி ஓட்டம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் நடுரோட்டில் வெட்டப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் இருந்த விஜய்யை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை செய்ததில்… கஞ்சா போதையில் இருந்த நண்பர்கள் சண்டையில் வெட்டியதாக… முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் வெட்டி விட்டு தப்பி ஓடிய விஜய்யின் நண்பர்கள் ஒருவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை நடுரோட்டில் வெட்டப்பட்டது அப்பகுதியில் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்