Fri. Dec 20th, 2024

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் சென்னையில் கைது…!!!

கடந்த 2004 ம் ஆண்டு சென்னை மையிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரன் கோவிலில் சீரமைக்கும் பணிகள் நடைப்பெற்றது அப்போது சிலைகள் பழுதடைந்து இருப்பதாக கூறி அதனையும் சீர் செய்துள்ளனர் அப்போது சீரமைப்பு செய்யப்பட்ட சிலைகள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு சிலைகள் எங்கு சென்றது என தீவிர விசாரணைக்கு உட்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அப்போது மைலாப்பூரில் இந்து அறநலத்துறையில் டிசியாக இருந்த திருமகள் தற்போது கூடுதல் ஆணையராக இருந்து வருகிறார் இந்த சிலைகள் மாற்றப்பட்டதுக்கும் எனக்கும் எந்த விதமாக சம்பந்தமும் இல்லை என்று உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் வழங்க கோரி அனுமதி மனு வழங்கி இருந்தார் ஆனால் அது செல்லது என்று கடந்த மாதம் உயர்நீதி மன்றம் திருமகளின் மனுவை நிராகரித்தது அதன் அடிப்படையில் திருமகள் சில தினங்களாக தலைமறைவாக இருந்தார் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த திருமகளை தேடி வந்தனர் இந்த நிலையில் தற்போது 1:30-மணியளவில் திருமகளை சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர் மேலும் திருமகலை கும்பகோணம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சிலை தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு செல்கின்றனர்…