Sat. Dec 21st, 2024

தொழிலதிபர் கொலை வழக்கில் தலைமறைவான பெண் வழக்கறிஞர் கைது.

ஆகஸ்ட் 09-2019

சென்னை, அடையார் இந்திரா நகர் முதல் அவன்யூவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ் பரத்வாஜ் (50). தொழில் அதிபரான இவர், வயதான தனது இரு சித்திகளுடன் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ் பரத்வாஜ், அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

கொலை செய்யப்பட்ட சுரேஷ் பரத்வாஜ்

இது குறித்து அவரது சகோதரர் வெளிநாட்டில் இருந்து அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் பரத்வாஜ் என்பவரை தேடி வந்த நிலையில் அவரது டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பரத்வாஜ் வீட்டில் வேலை செய்து வந்த இளம் பெண்ணை, அவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அடையாறில் உள்ள பெண் வழக்கறிஞர் பிரீத்தி என்பவர் பரத்வாஜியிடம் ரூ.65 லட்சம் ரூபாய் வரை பறித்ததாகவும். ஆனால் சொன்னபடி அந்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்பதால் பணத்தை திரும்ப தரும்படி பரத்வாஜ் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வக்கீல் பிரீத்தி காசிமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற குடுமி பிரகாஷ் (30) மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து பரத்வாஜை காசிமேடு கடற்கரையில் இருந்து ஒரு படகில் ஏற்றிக் கொண்டு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் அழைத்து சென்று அங்கு வைத்து துடுப்பு கட்டையால் அவரை அடித்துக் கொன்றதாக… அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் மூலம் உடலை கடலில் வீசியது தெரிந்தது.

தலைமறைவான வக்கீல் பிரீத்தி

இந்த வழக்கில் கூலிப் படையை சேர்ந்த பிரகாஷ், சுரேஷ் (40), மனோகர் (45), ராஜா (30), சந்துரு (29) மற்றும் சதீஷ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதும் வக்கீல் பிரீத்தி தொடர்ந்து தலை மறைவாக இருந்து வந்த நிலையில் அடையார் துணை ஆணையர் பகலவன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அடையார் இந்திரா நகரில் பதுங்கி இருந்த வக்கீல் பிரீத்தியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்