பெண்ணை தாக்கி 7 சவரன் தாலி சங்கிலி பறிப்பு | இருவர் கைது |
ஆகஸ்ட் 08-2019
அமைந்தகரை, கலெக்ட்ரேட் காலனியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி உஷா (35), வீட்டின் அருகே உள்ள கடைக்கு நேற்று இரவு 8 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் உஷாவின் கழுத்தில் இருந்த 7-சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். உஷா திருடன் திருடன் என்று சத்தம் போடவே மர்ம நபர்கள் உஷாவை தாக்கி கீழே தள்ளி விட்டு பைக்கில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து உஷா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து அண்ணாநகர் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் பின் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் முத்துக் கிருஷ்ணன் தெருவில் நின்று கொண்டு இருக்க… அந்த வழியாக வந்த தனிப்படை போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அமைந்தகரையை சேர்ந்த ரகீம் (19), மற்றும் அஜித் (22) என தெரியவந்தது.
இருவர் மீதும் ஏற்கனவே மதுரவாயல், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழிப்பறி,கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்கொண்டு விசாரணை நடத்திய பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-நமது நிருபர்