Sat. Dec 21st, 2024

காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி செய்த கைதி.

ஆகஸ்ட் 08-2019

திருட்டு வழக்கில் கைதான நபர்கள் விசாரணையின் போது காவல் நிலையத்தில் உள்ள டீ கிளாசை உடைத்து கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சூளை பகுதியை சேர்ந்த அசோக் (20). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஷ்ரப் (23) என்பவருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டினுள் உறங்கும் போது இரண்டு மர்ம நபர்கள் அறையில் நுழைந்து செல்போன்களை திருடி கொண்டு ஓடியதாகவும். அப்போது சத்தம் கேட்டு அசோக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் விழித்து, துரத்தி இரண்டு மர்ம நபர்களை பிடித்தனர். பின்னர் அசோக் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியமேடு காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் சூளை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்பதும் தெரிய வந்ததை அடுத்து அவர்களிடம் இருந்த 6 செல் போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் நாகராஜ் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவர காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த நாகராஜ் நேற்று இரவு திடீரென்று டீ குடிக்கும் கண்ணாடி கிளாசை உடைத்து கழுத்து மற்றும் கை பகுதியில் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார்.

தற்கொலை முயற்சி செய்த நாகராஜ்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகராஜை காவலர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு
அவரது கழுத்தில் நான்கு தையல்கள் போட்டு புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

-நமது நிருபர்