Sat. Dec 21st, 2024

கத்தியை காட்டி மிரட்டியவர்களின் படங்களை தர போலீசார் மறுப்பு..| உதவி ஆய்வாளர் மகனுக்கு தொடர்பா? |

ஆகஸ்ட் 06-2019

சென்னை அண்ணா நகர் சிந்தாமணி அருகே ( BLUE WAVES ) ப்ளூ வேவ்ஸ் என்ற மசாஜ் சென்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஜெய் என்பவர் நேற்று வெளியில் சென்றபோது மசாஜ் சென்டரில் பணிபுரியும் கார்த்திகா ராணி (27) அங்கு தனியாக இருந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஒரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், திடீரென்று மசாஜ் சென்டருக்குள் நுழைந்தது. பின்பு அங்கு இருந்த பெண்ணிடம் மசாஜ் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு கார்த்திகா ராணி நேரம் முடிந்துவிட்டது, நாளை வாருங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது அந்த கும்பல் பேசிக் கொண்டே அழகு நிலையத்தை நோட்டம் விட்டனர்.

உடனே சற்றும் எதிர்பாராத நேரத்தில் பட்டா கத்தியை திருப்பி கார்த்திகா ராணியின் தொடையில் தாக்கியுள்ளனர். அவரை சராமாரியாக தாக்கி கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். அப்போது அவரது ஆடையும் கிழிந்துள்ளனர். பின்பு அந்த கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பியது. கார்த்திகா சத்தம் போட்டு கத்திக் கொண்டே வெளியே வந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள். அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று ஆட்டோ பதிவு எண்ணை மட்டும் குறித்துள்ளார்.

பயன்படுத்திய ஆட்டோ

இந்த சம்பவம் தொடர்பாக மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜெய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய டி.பி‌.சத்திரம் போலீசார், பின்னர் காவல் உதவி ஆணையர்கள் பாலமுருகன் மற்றும் ராஜா அவர்களின் தலைமையில் ஆய்வாளர்கள்
சாந்தி தேவி, நாகூர் மீரான், பொன்ராஜன் மதியழகன், விநாயகம் ஆகியோர் உள்ளடக்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோவின் பதிவு நம்பரை வைத்து ஆட்டோ ஓட்டி வந்த தாம்பரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ஆட்டோவில் பயணம் செய்த மேற்கு தாம்பரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் (26), ராகுல் (23), திவாகர் (23), ஜெய்னுல்லா (21), ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட திவாகர் என்பவர் (SSI) சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் எனவும், அவர் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளதால் தான் குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் படங்களை போலீசார் தர மறுப்பதாக தகவல்? என தெரிய வருகிறது. மேலும் வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களிலும் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். அங்கே எல்லாம் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்ததால் அண்ணாநகரில் உள்ள இந்த மசாஜ் சென்டரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-நமது நிருபர்