Fri. Dec 20th, 2024

கால் டாக்ஸி டிரைவரை தாக்கிய வழக்கில் | ஒருவர் மட்டும் கைது |

கால் டாக்ஸி டிரைவரை தாக்கிய வழக்கில் | ஒருவர் மட்டும் கைது |

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் (35), கால் டாக்சி ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். 100அடி ரோடு MMDA அருகே சென்றபோது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் காரை மடக்கி சவாரிக்கு வருமாறு கூறியதாகவும் அதற்கு தமிழ்செல்வன் இது கால் டாக்சி என்பதும் ஆப் மூலம் புக் செய்தால் மட்டுமே சவாரி வர முடியும் மேலும் தான் வீட்டிற்கு செல்வதால் சவாரி வர முடியாது என தெரிவித்ததாகவும். இதனால் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்களும் தமிழ்செல்வனை காரின் கதவை திறந்து வெளியில் இழுத்துள்ளனர். பின்னர் தமிழ்செல்வன் காரில் இருந்து இறங்கியதும் காரில் இருந்த அவரின் பர்ஸ் மற்றும் செல்போனை எடுத்து வைத்து கொண்டனர். மேலும் மற்றொரு செல்போன் மூலம் தமிழ்செல்வன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்ததை கண்டதும் இரண்டு நபர்களும் நடுரோட்டில் வைத்து தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கினார்கள். இதனை அங்கிருந்த வாகன ஓட்டிகள் பார்த்தபடி சென்றனர். ஆனால் யாரும் தடுக்க முன்வரவில்லை தாக்கி விட்டு இரண்டு நபர்களும் தப்பி சென்று விட்டனர்.

கால் டாக்சி டிரைவர் தமிழ் செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேனுகாதேவி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அரும்பாக்கம் பிபி நகரை சேர்ந்த சூர்யா (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருமங்கலம் பகுதியை சேர்ந்த விவேக் (20), என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்