பெண் கொலை வழக்கில் | வடமாநில இளைஞர்கள் இருவர் கைது |
வடமாநில பெண் கொலை வழக்கில் | அவரது நண்பர்கள் இருவர் கைது |
சென்னை அண்ணாநகர் பகுதியில் பிங்கி (30), என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணாபகதூர் (26), என்பவருடன் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பார்த்த கிருஷ்ணாபகதூர், வீட்டின் கழிவறையில் பிங்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும். துணை ஆணையர் முத்துசாமி, மற்றும் திருமங்கலம் ஆய்வாளர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பிங்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கிருஷ்ணபகதூரிடம் விசாரணை நடத்தியதில் முதலில் அவர் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும் பிறகு இரண்டு வட மாநில வாலிபர்கள் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் தெரிவித்தார். அந்த பகுதியின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இரண்டு வட மாநில வாலிபர்கள் பிங்கியின் வீட்டில் இருந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்ததால். பிங்கியின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட நம்பர்களை வைத்து மேற்கு வங்கத்தை சேர்ந்த விகாஷ் சர்மா, மற்றும் விகாஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகவும் போலீசார் கூறுகையில் : –
கணவரை பிரிந்த பிங்கி அண்ணா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கிருஷ்ணாபகதூர் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளனர். பிங்கி வசதியான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடலில் (டாட்டூ – பச்சை) குத்தும் வேலை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக உயர் ரக புடவைகளை வாங்கி வந்து அதனை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார். மேலும் கிருஷ்ணா பகதூர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நேரங்களில் வட மாநில வாலிபர்களுடன் பிங்கி மது அருந்துவது வழக்கம் என்றும் சம்பவம் நடந்த அன்று வீட்டிற்கு வந்த விகாஷ் குமார் மற்றும் விகாஷ் சர்மா ஆகியோருடன் சேர்ந்து பிங்கி மது அருந்தி உள்ளார். அப்போது பிங்கியுடன் இருவரும் உல்லாசமாக இருந்தாகவும் பணம் குறைவாக இருந்ததால் தங்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து பிங்கியை அடித்தபோது வீட்டில் இருந்த வாஷ் பேசனில் இடித்துக் கொண்டார். வெளியே சொல்லி தங்களை மாட்டி விடுவார் என்ற பயத்தில் கைகளை பிடித்துக் கொண்டு தலையண முகத்தை அமுக்கி உள்ளனர். பின்னர் கழிவறையில் வழுக்கி விழுந்தது போல் இருக்க வேண்டும் என்று பிங்கியிடம் இருந்த செல்போனை எடுத்து கொண்டு இருவரும் சென்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்…
-நமது நிருபர்