காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு முத்தம் கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர்…
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்
SSI-பாலசுப்பிரமணி/50 கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியின்போது இடையில் இரவு 10.30- மணியளவில் ஸ்டேஷனுக்கு வந்தவர் அங்கு கணினி பிரிவில் பெண் காவலர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கு விவரங்களை பதிந்து கொண்டு இருந்தார் அவரது அருகில் வந்த SSI பாலசுப்பிரமணி, பனி அதிகமாக உள்ளது குளிர் தாங்க முடியவில்லை என பேச்சை தொடங்கி, திடீரென பெண் போலீஸ் கன்னத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்து இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் தீடிர் என்று அங்கு வந்த உளவுத்துறை காவலர் ஒருவர் வந்தவுடன் அவரிடம் அந்த பெண் காவலர். SSI சார் என்னை வலுக்கட்டாயமாக அழைத்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி உள்ளார்…
உளவுத்துறை காவலர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பி மறுநாள் பெண் போலீஸ் மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக்கிடம், பாலசுப்பிரமணி மீது பாலியல் புகார் அளித்தார் அவர் விசாரணை எதுவும் நடத்தாமல் SSI-யை சஸ்பெண்ட் செய்தார்
பின்னர் டிஎஸ்பி.ராதாகிருஷ்ணன் விசாரணை செய்ய உத்தரவிட்டார் பிறகு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10-மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துள்ளார் அப்போது, அங்கு பெண் போலீஸ் அருகில் சென்று முத்தம் கொடுத்துவிட்டு அவரிடம் பேச்சு கொடுக்கிறார் சில நொடிகளில் இருவரும் முத்தம் கொடுக்கின்றனர் இவ்வாறு 2 நிமிடம் 50-நொடிகள் ஓடும் வீடியோவில் பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார் பின்னர் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளிப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுவரையில் அந்த பெண் காவலர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது…