Sat. Dec 21st, 2024

மயிலை கபாலி கோவில் | ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி |

ஜூலை 22-2019

சென்னை அசோக் நகர் 83வது தெருவை சேர்ந்த முனுசாமி(40). இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 9 மாதங்களாக, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலில் முனுசாமி ஒப்பந்த முறையில் கிளீனிங் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் முனுசாமி நேற்று மதியம் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அருகிலிருந்த மின்சார பெட்டியின் மீது தண்ணீர் பட்டதும் அதன் விளைவாக உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே முனுசாமி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் சன்னதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த முனுசாமியின் உடலானது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர்.