பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய நபர் ஆந்திராவில் கைது.
ஜூலை 19-2019..,
ஓட்டேரியை சேர்ந்த பெண் ஒருவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கும் புளியந்தோப்பை சேர்ந்த டில்லிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதன் காரணமாக, நெருங்கி பழகியதால்… தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறக்கப்போவது தெரிந்த டில்லிராஜ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திரா சென்று தலைமறைவாகி விட்டார் என்றும்… தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சென்ற அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில். டில்லிராஜ் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அங்கு சென்ற புளியந்தோப்பு போலீசார் அவரை பிடித்து வந்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
-நமது நிருபர்