Sat. Dec 21st, 2024

சென்னையில் 11 ரவுடிகள் கைது | காவல் ஆணையர் உத்தரவு |

ஜூலை 18-2019…,

சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம் தலை தூக்குவதாகவும், சிலரை மிரட்டி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்ததால்..! காவல்துறையினர் ரவுடிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து, பரங்கிமலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

இதில் பரங்கிமலை வஉசி நகரை சேர்ந்த தினேஷ் என்கிற எலி தினேஷ் (23), நந்தம்பாக்கத்தில் மணப்பாக்கத்தை சேர்ந்த ராஜி என்கிற ராஜசேகர்(26), கிரிகோரி தெருவை சேர்ந்த மணிகண்டன் (26), பிரபு என்கிற ராசு (25), ஆதம்பாக்கத்தில் அம்பேத்கர் நகரை சேர்ந்த உதயகுமார் என்கிற கொப்பறை (24), வினோத் (22), பழவந்தாங்கல் பிவி. நகரை சேர்ந்த அப்பு என்கிற தொண்ட அப்பு (36), சீதாராமன் (28), மடிப்பக்கத்தில், உள்ளகரத்தை சேர்த்த ரமேஷ் (33), தேவராஜ் (39) கீழ்க்கட்டளையை சேர்ந்த பப்ளு (32) ஆகிய 11 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, அடிதடி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று… இவர்கள் அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்