Sun. Dec 22nd, 2024

வாங்கிய வட்டியை கட்டமுடியாமல் | வட்டிக்கு விட்டவரையே கொலைசெய்த 4 பேர் கைது |

ஜூலை 18-2019

சென்னையில் வட்டி பணம் கொடுக்க பயந்து.. வட்டிக்கு பணம் கொடுத்த இட்லி மாவு பெண் வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசி, அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து சேட்டு கடையில் அடமானாம் வைத்து செலவு செய்த நான்கு பேர் கைது.

கொலை செய்யப்பட்ட அல்போன்ஸ்மேரி

ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்மேரி, இவர் அதேபகுதியில் இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். 42 வயதான இவருக்கு குழந்தைகள் கிடையாது. அதே பகுதியில் பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி மெரினா பீச்சுக்கு சென்று மீன் வாங்கி வருவதாக கணவர் இருதயநாதனிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கூறி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தங்கம் அருகே கிணற்றில் அவரின் சடலம் நேற்று மீட்கபட்டுள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அல்போன்சாமேரி பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதில்,ராயபேட்டையை சேர்ந்த தேவி, வள்ளி ஆகியோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அவர்கள் வட்டி பணம் மட்டும் பல நாட்களாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளையும் விற்று வட்டி பணமாக அல்போன்ஸாமேரிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இடதுப்பக்கம் – வள்ளி, வலதுபக்கம் – தேவி

மேலும் மேலும் அவர்கள் வட்டி பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அல்போன்ஸாமேரியை கொலை செய்வது என முடிவு செய்துள்ளனர். வட்டி பணம் கொடுப்பதாக கூறி ராயபேட்டையில் உள்ள தேவி வீட்டிற்கு அல்போன்ஸாவை வரவழைத்துள்ளனர். அங்கு வந்த மேரியை தலையில் இரும்பு கம்பியால் அடித்து தேவி மற்றும் அவரது கணவர் மணி மற்றும் வள்ளி, சுரேஷ் ஆகியோர் கூட்டாக கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையான அல்போன்ஸாமேரியை ஆட்டோவில் ஏற்றி மதுராந்தகம் கொண்டு சென்று கிணற்றில் வீசியது காவல்துறை விசாரனையில் தெரிய வந்தது. மேலும், அல்போன்ஸாமேரி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்து அதை சேட்டு கடையில் அடமானம் வைத்து அந்த பணத்தை செலவு செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து
செய்து சிறையில் அடைத்தனர்.

இடதுபக்கம் – மணி, வலதுபக்கம் – சுரேஷ்

மேலும் மேலும் வட்டி கொடுக்க பயந்து வட்டிக்கு பணம் கொடுத்தவரையே கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற சம்பவம் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்