Sun. Jan 5th, 2025

கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி | இருவர் கைது |

ஜூலை 17

மாடம்பாக்கம், சித்தார்த்தன் நகர், சன்னதி குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (60). இவரது மனைவி புவனேஸ்வரி (57). இருவரும் நேற்று மாலை மேடவாக்கம் சாலை வழியாக… மடிப்பாக்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈச்சங்காடு சந்திப்பு அருகே, சிக்னலுக்காக காத்திருந்த போது… பைக்கில் வந்த 2 பேர் புவனேஸ்வரியின் கைப்பையை பறித்துக் கொண்டு… பைக்கில் வேகமாக தப்பித்தனர். உடனே புவனேஷ்வரி கத்தி கூச்சல் போட… அங்கிருந்த சிலர் பைக்கில் சென்றவர்களை விரட்டிச் சென்று, பிடித்து தர்ம அடிபோட்டு அருகில் உள்ள மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நடத்திய விசாரணையில், ஒருவன் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (25) என்றும் மற்றவன் பெயர் சொல்லமுடியாத அளவிற்கு குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் புவனேஷ்வரியிடமிருந்து பறித்த 12 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் போன்றவற்றை போலீசார் மீட்டு… தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது நிருபர்