Sat. Jan 4th, 2025

குழந்தையை அங்கன்வாடியில் சேர்க்க மறுத்த பெண் ஊழியர் மீது புகார்.

ஜூலை 13-2019

அங்கன்வாடி மையம் பெண் ஊழியர் மீது ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார்.

சென்னை முகப்பேர் 6 வது பிளாக்கை சேர்ந்தவர் ராணி(45). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். முகப்பேர் கிழக்கு பிளாகில் உள்ள இர்பான் என்பவரின் மனைவி பாத்திமா (31). அவரது குழந்தையை இந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்க கடந்த 1ம் தேதி வந்தார். அதற்கு ராணி இங்கே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கிறார்கள். மேலும் உங்கள் வீட்டு முகவரி எனது அங்கன்வாடி மையத்தின் எல்லைக்குள் வரவில்லை. அங்கு பக்கத்திலேயே உள்ள மற்றொரு அங்கன்வாடி மையத்துக்கு சேர்க்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாத்திமா தனது கணவர் இர்பானுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இர்பான் அதே பகுதியை சேர்ந்த 93வது திமுக வட்ட செயலாளர் டீக்கா என்பவருடன்… அங்கன்வாடி பணியாளர் ராணியிடம், எதற்காக சேர்க்க மாட்டிர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு ராணி என்னால் சேர்க்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை திமுக வட்ட செயலாளர் டீக்கா தலைமையில் அங்கன்வாடி பணியாளர் ராணி மீது புகார் கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புகரை பெற்று கொண்ட ஆய்வாளர் சுரேந்தர்… அங்கன்வாடி பெண் ஊழியர் மீது சி.எஸ்.ஆர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

-நமது நிருபர்