Sat. Dec 21st, 2024

நிரந்தர வேலை கிடைக்காத விரகத்தியால் இளம் பெண் தற்கொலை.

ஜூலை 11-2019

ஐ.சி.எப் பகுதியில் நிரந்தர வேலை கிடைக்காத விரகத்தியால் பட்டதாரி இளம் பெண் தற்கொலை.

சென்னை, ஐசிஎப் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் லட்சுமி. இவரது மகள் ஜோதி வயது 22. பட்டதாரியான இவர், அரசு சம்மந்தமான சிறு சிறு ஒப்பந்த வேலை செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த ஜோதி… கடந்த 6ம் தேதி அன்று தன்னுடைய வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.

உடனே ஜோதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஐ.சி.எப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

-நமது நிருபர்