Sat. Dec 21st, 2024

குடிசை மாற்று வாரியத்தில் |வீடு வாங்கித் தருவதாக ஏமாற்றிய பெண் |

ஜூலை 11-2019

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய கும்பலை கைது செய்யக்கோரி கானத்தூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.

சென்னை கானத்தூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பொது மக்களிடம், சித்ரா என்ற பெண், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்… குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி… பத்துக்கு மேற்பட்டோரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் வாங்கி… ஏமாற்றியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட 13 பேர்.. நேற்று இரவு 10 ஆம் தேதி.. கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபோது.. அக்காவல் நிலைய காவலர்கள், அப்புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்டோர்.. காவல் நிலையத்திற்கு வெளியே நின்று போராட்டம் செய்ய ஆரம்பித்தனர்…

காவல்துறை இதனை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டோர் கோரிக்கை.

நமது நிருபர்