Sat. Dec 21st, 2024

தீயில் கருகிய ஏடிஎம் மையம் | 4.50 லட்சம் பணம் தப்பியது |

தீயில் கருகிய ஏடிஎம் மையம் | 4.50 லட்சம் பணம் தப்பியது |

ஜூலை, 10, 2019
கோயம்பேடு அருகே நெற்குன்றம் சாலையில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், இயந்திரத்தின் உள்ளே இருந்த 4.50 லட்சம் ரூபாய் சேதமின்றி மீட்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வடபழனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (58). இவர் நெற்குன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.கடையின் ஒரு பகுதியில், தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது… தினந்தோறும் இரவு நேரத்தில் கடையை மூடும் போது, ஏடிஎம் மையத்தையும் முத்துகிருஷ்ணன் மூடி விட்டு வீடு சென்று விடுவார். காலையில் சீக்கிரமாக வந்து ஏடிஎம் மையத்தை திறந்து விட்டு செல்வார். இந்த நிலையில் இன்று காலை ஏடிஎம் மையத்தை திறந்து விட்டு நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவல் அறிந்ததும் கோயம்பேடு மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஜெராக்ஸ் கடையில் இருந்த நான்கு ஜெராக்ஸ் மெஷின்கள், இரண்டு கம்ப்யூட்டர்கள், டேபிள், சேர் மற்றும் ஏடிஎம் எந்திரத்தில் ஒரு பகுதி எரிந்து விட்டது. சம்பவம் குறித்து ஏடிஎம் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம் மெஷினில் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை மீட்டு சென்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

-நமது நிருபர்