Sat. Dec 21st, 2024

விசாரணைக்கு வந்த உதவி ஆய்வாளரை தாக்கிய | 7 பேர் கைது |

விசாரணைக்கு வந்த உதவி ஆய்வாளரை தாக்கிய | 7 பேர் கைது |

ஜூலை, 10, 2019
விசாரணைக்கு வந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதோடு,அவரிடம் இருந்த வாக்கி டாக்கியை பறித்து து ஏழு பேரை, காவல் துறையினர் கைது விசாராணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(23) இவர் கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வருகிறார். முருகானந்தம் கடந்த 6ம் தேதி அன்று இரவு 9- மணி அளவில் கோயம்பேடு 7 நம்பர் வாசல் அருகில் நின்று கொண்டு, தனதுதாயாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கோயம்பேடு போலீசார் ரோந்து வாகனத்தில் வந்து முருகானந்தத்தை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதற்கு முருகானந்தம் எதற்காக என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த தலைமை காவலர் சுரேஷ் ,  முருகானந்தத்தை பிளாஸ்டிக் பைப்பை வைத்து சரமாரியாக தாக்கினர். முருகானந்தம் அடி தாங்க முடியாமல் சத்தம் போடவே, கூலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். இதை பார்த்த காவலர்கள் ஓட்டம் பிடித்தனர்.

கொந்தளித்த கூலித் தொழிலாளிகள் 500 க்கும் மேற்பட்டகள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கூலி தொழிலாளியை தாக்கிய காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலர் சுரேஷ் என்பவரை பணி இடை நீக்கம் செய்தனர்.விசாரணை சம்பந்தமாக கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ், சம்பவ இடத்திற்கு விசாரணை செய்ய வந்தபோது, அங்கு இருந்த வாலிபர்கள் உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து, சரமாரியாக தாக்கி கையில் இருந்த வாக்கி டாக்கியை பிடிங்கி துரத்தினர். காயம்பட்ட உதவி ஆய்வாளர் ராஜீவ் கடந்த 6 ம் தேதி இரவு, கிழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி ஆய்வாளரை தாக்கியவர்கள் யார் என்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், அரியலூரைச் சேர்ந்த அரிகரன் (19), திருநாவுக்கரசு (22), சேகர், ராம்குமார் (21), பீமாராஜ்(24), குணசேகரன் (50), சிற்றரசு (24) ஆகிய 7- நபர்களையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…

நமது நிருபர்